வெந்த ஆசையே வெற்றி:-

விரக்தியின் விளிம்பில் நின்று
விடிவை தேடும் இளைஞனே - நீ
முயற்சியின் நுனியை தொட
மறந்து போனது ஏனோ…

பயத்தை பாடையிலேற்றி எரி
தயக்கத்தை உன்னிலிருந்து தூக்கியெறி – கண்ணா
தன்னம்பிக்கையை நினது வில்லாக்கி
நல்முயற்சியை நினது அம்பாக்கி வீசு!

எவரோ பட்ட அறிவு
எழுதிவைத்த ஏட்டறிவாக மாற - இளைஞர்களே
நீவிர் பட்ட அறிவு
ஏடாக மாறும் காலமெப்போ?

திட்டத்தை தெளிவாக்கி விரிக்க
துணிவுடன் பணிவும் பயணமாக
காலநேரம் மறக்கும் உழைப்பே
வெற்றி சூத்திரத்தின் முதற்படி

அடுப்பினுள் ஆசை வைத்து
முயற்சி எண்ணை ஊற்றி
பயிற்சி நெருப்பு பற்றியெரிய
வெந்த ஆசையே வெற்றி!

நன்றி

வாழ்க வளமுடன்

அன்புடன்

ரா.சிவகுமார்

எழுதியவர் : ரா.சிவகுமார் (5-Mar-13, 4:42 pm)
சேர்த்தது : siva71
பார்வை : 71

மேலே