டெசோ...போராட்டத்தால் மனம் மாறுகிறதா காங்கிரஸ் அரசு...! காட்சிகள் மாறுமா..?

டெசோ...போராட்டத்தால் மனம் மாறுகிறதா காங்கிரஸ் அரசு...! காட்சிகள் மாறுமா..?

டெல்லியில் வரும் 7 - ம் தேதி டெசோ கருத்தரங்கம் அரசியல் சாசன கிளப்பில் நடைபெற இருக்கின்றன. மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடக்க உள்ள இந்த கருத்தரங்கிற்கு சுமார் ஒரு நூறு எம்.பி.க்களையாவது அழைத்து வந்து டெசோ பற்றி விளக்கமாக கூறுவது என்று திமுக முடிவு எடுத்து அறிவித்துள்ளதை அனைவரும் அறிவோம்...முதலில் திமுக தலைவர் கலந்து கொள்வதாக இருந்தது...தற்பொழுது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்பார் என்று அறிவித்துள்ளது...சென்னையில் திமுகவினர் இன்று நடைபெற்ற போராட்டத்தில் சுமார் பத்தாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டு வள்ளுவர் கோட்டத்தில் கைதாகியுள்ளனர்.

இதற்கிடையே திமுக தலைவர் மு.க.அவர்கள் அமெரிக்க அரசு கொண்டுவரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த கோரிக்கைக்கு உடனடி பதிலாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களை வரவழைத்து ஒரு அரை மணி நேரம் மூடிய கதவிற்குள் விவாதித்துள்ளார். தமிழக விசயத்தில் எப்படி செயல்படலாம் என்று ப.சிதம்பரம்..வாசன், ஜெயந்தி நடராஜன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை கூப்பிட்டு பேசியுள்ளார்.

இவை ஒருபுறம் இருக்க, அமெரிக்க அரசு கொண்டுவரும் தீர்மானம் ஒன்றும் பெரிதாக இருக்கப்போவதில்ல...இலங்கை இந்திய அரசை போர்க்குற்றம், இனப்படுகொலை குறித்து காப்பாற்றவே இருக்கும் என்று ஒரு தரப்பு செய்தியையும் மறுப்பதற்கில்லை...கடந்த வருடம் அமெரிக்க அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்த ஆண்டு கொண்டுவர உள்ள தீர்மானத்திற்கும் நிறைய வேறுபாடுகளும் சில ஒற்றுமைகளும் இருப்பதை அனைவருமே அறிவோம்...

கடந்த ஆண்டில் அமெரிக்க அரசின் செல்வாக்கு இந்திய அரசியல் கட்சிகளிடம் அரசிடம் போதுமான அளவில் இல்லை...ஆசிய புவிசார் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக பிரிக் கூட்டணிகளே முன்னின்றன...கடந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இந்த ஆண்டு துவக்கம் வரை அமெரிக்க அரசு ஆசிய பிராந்திய அரசியலில் தன்னை வலுவாக்கிக் கொண்டுள்ளது.

வரும் 7 - ம் தேதி நடைபெற உள்ள டெசோ கருத்தரங்கில் பாஜக மற்றும் மாயாவதி தொடங்கி மம்தா வரை நீண்டு சரத் யாதவ் முதல் சந்திரபாபு நாயுடு வரை உள்ள எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட கலந்து கொள்வார்கள் என்றும் தோன்றுகிறது...அந்த அளவிற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக டெசோ போராட்டங்கள் அமைந்து விட்டன. இதன் ஒருபகுதியாக இலங்கைக்கான தூதர் அசோக் காந்தா கூறியதையும் கவனத்தில் கொண்டு பார்த்தல் புரியும்.

இலங்கை தூதர் காந்தா...தமிழகத்தின் வழியே இந்தியாவைப் பார்க்க வேண்டும் இலங்கை அரசு என்று கூறியுள்ளதில் சாணக்கியன் கூறிய அரசு எந்திரம் என்ற சூட்சுமம் இருந்தாலும், தவிர்க்கவே முடியாமல் இந்த வார்த்தைகளை மிக நீண்ட மௌனத்திற்குப் பிறகுதான் கூறியுள்ளார். டேசொவின் தாக்கமும் அதிமுக வின் எதிர் அரசியலும் என்று கொள்ளலாம். தமிழக மக்கள் அளித்து வரும் பெரும் ஆதரவைக் கண்டு மத்திய அரசு சற்றே திரும்பி பார்த்துள்ளது. கிட்டத்தட்ட காங்கிரஸ் தவிர அணைத்து கட்சிகளுமே இலங்கை தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற நிலையை எடுத்துவிட்டார்கள்.

திமுக காங்கிரஸ் உள்குத்து அரசியலில் காங்கிரஸ் கட்சி மிகவும் பின்தங்கியுள்ளது..திமுகவின் தலைவர் நகர்த்தும் அரசியல் விளையாட்டில் பாவம் காங்கிரஸ்காரர்கள் முழிபிதுங்கி நின்று கொண்டுள்ளார்கள். அ .ராசா 2 G ஊழலில் ஜேபிசி யில் சாட்சியம் அளிக்கும் உரிமை வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு திமுகவின் அரசியல் சென்று விட்டது. காங்கிரஸ் அரசோ ஜேபிசி யை கலைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..!

இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கையான இலங்கை போர்....அங்கு நடந்த படுகொலையை போர்க்குற்றத்தை திமுகவின் பாராளுமன்ற எம்.பி.க்கள் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது நாடுகளிடமாவது கொடுத்திருப்பார்கள்..இந்த எண்ணிக்கை குறைவாகக் கூட இருக்கலாம். ஆனால் இந்திய அரசின் கொள்கை முடிவை அப்பட்டமாக எதிர்த்து, அது தவறு என்று ஐ.நா.வில் ஏனைய அயல் நாடுகளிடம் பகிரங்கமாக கூறிவருகிறார்கள்...இந்த செயலுக்கு திமுக கட்சியை நிரந்தரமாக தடை கூட செய்யலாம்...
அப்பட்டமான அல்ல முற்ற முழுக்க இந்திய இறையாண்மையை மீறியிருக்கிறார்கள்...எதிராக இருந்துள்ளார்கள் இந்த டெசோ மூலமாக என்று கருதலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஆக, தனி மனிதர்கள் குட்டி இயக்கங்களுக்கு மட்டும் இறையாண்மை...பெரிய கட்சிகளுக்கு அவை இல்லை..என்று அறியலாம்.
திமுகவின் மெஹா சைஸ் ஊழல்களை வெளிக்கொணர்ந்த அமெரிக்க அரசை அதன் போக்கிலே சென்று...இன்று அந்த அமெரிக்க அரசை தெருவில் இறக்கியுள்ளார் திமுகவின் தலைவர்..இந்த அரசியலில் அமெரிக்காவே தள்ளாடுகையில் நேற்று முளைத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் என்ன செய்ய முடியும்...? இந்த அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து நோக்கும் பொழுது டேசொவின் மூலம் பழைய நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை இந்திய அரசை ஓரளவிற்காவது அடுத்த கட்டத்திற்கு நகற்றுவார் என்று கருதலாம்...அப்படி நடக்குமெனில் அது டெசோ வினால் தான் என்று அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (5-Mar-13, 4:55 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 95

மேலே