ஓடிப்போலாமா?

நாண் ஏற்ற போவதுமில்லை
மரபுகளை முறிக்க போவதுமில்லை

மதம் கொண்ட யானை
முரட்டு தனமான குதிரை
அடக்க முடியாத காளை
இவைகளோடு மல்லு கட்ட
களம் புக போவதுமில்லை

பிஞ்சிலேயே பழுப்பதாய்
எண்ணி கொண்டு
வீம்புக்காய் வெம்ப போவதுமில்லை

இடி நம்மை சற்று
தள்ளி விழுந்தாலே
கருகிப்போவோம்

காதலிலோ நம்
இதயத்தில் இடி விழுமாம்
கண்களில் மழை பொழியுமாம்
அந்தோ!
உடல் தாங்குமோ?

சரி காதலுக்காய் ஓடி போலாமா?

நம்மீது அளவற்ற பாசமும்
நிகரில்லா நம்பிக்கையும் கொண்ட
இதயங்களை எல்லாம் கொன்று
புதைத்து அக்கல்லறைகளை தாண்டி
ஓடுவது சரியா? சாத்தியமா?

என் தாய்
எறும்புகளுக்கு பசிக்குமே
என எண்ணி
அரிசிமாவில் கோலம் போடுபவள்
இவள் இதயத்திற்கு
என்னால் எப்படி
தீ வைக்க முடியும்?

என் தந்தை
வீட்டில் தொங்கி கொண்டிருந்த
மின்விசிறியில் சிட்டுகுருவி
கூடு கட்டிவிட
மின்விசிறியின் மின்இணைப்பை
நிரந்தரமாக துண்டித்தவர்
இவர் இதயத்தை
என்னால் எப்படி
தூக்கிலிட முடியும்?

என் அண்ணன்
நான் வீம்பாய் அடம்கொண்டு
பொய்யாக அழுதாளே
பதறிக்கொண்டு தன்
பொருட்களை வாரி வழங்கி
அழாதேடா என கெஞ்சி
நிற்கும் வள்ளல்

இப்படியா பட்டவர்களின்
இதயங்களில் எனக்காய்
கட்டிவைத்த கோட்டைகளை
ஓடிப்போய் தகர்ப்பதென்பது
நியாயமா?

என் திருமணத்தில்
சில ஏழைகளின் ஒருவேளை
அறுசுவை உணவு இருக்கிறது

விதவை பூக்காறியின்
வியாபாரம் இருக்கிறது

ஏழை பால்காறனின்
பிழைப்பு இருக்கிறது

இவர்கள் சோற்றில்
மண் அள்ளி போட்டுவிட்டு
என்னால் எப்படி ஓடமுடியும்?
இது தர்மமா?

காதலிக்க போகிறேன்
ஆம்
காதலிக்கத்தான் போகிறேன்

பெற்றோர்கள்
உள்ளம் பார்த்து,உயரம் பார்த்து,
நேரம் பார்த்து அழைப்பிதழ்களை
அழகழகாய் அச்சடித்து
மங்களகரமாய் மஞ்சள் தடவி
எட்டு திசைகளிலும் சுற்றிதிரிந்து
சொந்தம்,பந்தம்,சுற்றம்,சூழல்
நட்பு என எல்லோர்க்கும்
அன்பால் அழைப்பு விடுத்து

என்னவளை ஈன்றவர்கள்
தாம்
கண்ணே மணியே என
பொத்தி பொத்தி வளர்த்த
பொக்கிஷத்தை ஆனந்த கண்ணீர்
மல்கி என்னிடம் ஒப்படைக்க

பெற்றவர்கள் ஆசியில்
சொந்தங்கள்,பந்தங்கள்,
சுற்றம்,சூழல் என
எல்லோரின் வாழ்த்துகளுக்கு
மத்தியில்

நண்பர்களின் கரகோஷங்கள்
வின்பிளக்க ஆழகாய் தொடங்குவேன்
என் காதலை........,,,,,,,,

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (5-Mar-13, 6:15 pm)
பார்வை : 206

மேலே