வாழ்க்கையை நேசிப்பவர்கள் அவர்கள்..

விடியல் வருமா?
கேட்கின்றான்...
வேதனை சுமப்பவன் !
நம்புகிறான்..!

வேடிக்கை பார்ப்பவன்
வேலி போடுகிறான்..

விளம்பரத்திற்காக சிலரும்..
வித்தைகாட்ட பலரும்..

இவர்களால் அல்ல..
இரும்பு இதயமும்
இற்று போகாத நம்பிக்கையுடன்
நிச்சயம் அவன் விடியலை செய்வான்..

அப்போது ,
என்னால்...என்னால்.. என்று
வீரம் பேசி வாழத் துடிப்பார் இங்கே பலர்..

என்ன செய்வது ?
வாழ்க்கையை நேசிப்பவர்கள் அவர்கள்..
வைற்றை நேசிப்பவர்கள் இவர்கள்!

எழுதியவர் : ந. ஜெயபாலன்,நெல்லை நகர் (5-Mar-13, 7:49 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 89

மேலே