மாறாதது...

இந்தக் கடலலைகள்
எத்தனையோ காலடிகளைக்
கழுவிச் சென்றிருக்கின்றன..
காலடிச் சுவடுகளை
அழித்துச் சென்றிருக்கின்றன..

காலடிகளும் சுவடுகளும்
காலத்தால் மாறிவிட்டன..

கடல்-
மாறவில்லை அது.
அப்படியே உள்ளது
அலைகளுடன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Mar-13, 8:18 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 97

மேலே