குட்டி குட்டி கவிதை

காகிதம்
***********
கற்பனைக்கு வரிவடிவம்
அன்புக்கு வாரியணைப்பு
காதல் அதிகமாயின் முத்தம்
கோபமாயின் எனக்கு மரணம்.. ..
கைபேசி
***************
உறவுக்கு உபசரிப்பு
முகந்தெரியாதவருக்கு முதற்கவிதை
எத்தனை தொலைவிலோ - ஆனாலும்
நொடியில் உன் ஸ்பரிசம்
உன்னை வெறுத்தாலும்
உன்னில் பகிர்ந்துகொண்ட நினைவை
உன்னை தொடும்போதெல்லாம்
என் கண்முன்னே காட்டும்
கலங்கரை விளக்கம்
வெறுப்பு
*************
தன்னையும் அழித்து பிறரினது
உணர்வுகளையும் அழிக்கும்
ஆற்றல் கொண்டது
காதல் தூது
************
காதலுக்கு தூது செல்ல
இணையவலை மின்னஞ்சல் , வேண்டாம்
இமைக்குள் உலவும் விழியே போதும் ..
காதல் சொந்தம்
************************
காதல் யாருக்கும் சொந்தமாகலாம் - ஆனால்
காதலி காதலிப்பவனுக்கு மட்டுமே
சொந்தமாகட்டும்
திருமணம்
****************
இருமனம் இணையும் திருமணம் என்பது
திருந்தி வாழத்தான்
திரும்பி வருவதற்கல்ல .....
**************************************************************************