காட்சியே சாட்சிகள்

மனங்கள் இரண்டு இணைந்திட
மண வாழ்வும் மணந்திட
இல்வாழ்வைத் தொடங்கிட
இல்லறத்தை இனிதாக்கிட
நல்வாழ்வும் அமைந்திட
அவையோரும் வாழ்த்திட
உற்றமும் சுற்றமும் சூழ்ந்திட
விழிகளுக்கு விருந்து படைத்திட
அலங்கார மேடையில் அமர்ந்திட
இருக்கைகள் இரண்டும்
வரவிருக்கும் மணமக்களை
வரவேற்க காத்திருக்கும்
காட்சியே சாட்சிகள் நமக்கு
புதுவாழ்வு மலர்ந்திட !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Mar-13, 8:44 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 90

மேலே