நீயும் நானும் - நாம் ஆகியதால்
என் கவிதைகளை மெருகேற்றினேன் -
கவிதைகள் :
உனக்குப் பிடிக்கும் என்பதற்காக ,
தனித் திறமைகளை - உன்னிடம்
வெளிப்படுத்தினேன் :
நீ பாராட்டுவாய் என்பதற்காக
என் சோகங்களை
பகிர்ந்து கொண்டேன் :
நீ ஆறுதல் அளிப்பாய் என்பதற்காக
என் தனிமையை
உனக்கு உணர்த்தினேன் :
நீ என்னுடன் இருப்பாய் என்பதற்காக
நான் செய்த - இவை எல்லாம்
நாம் ஒன்றாக
வாழ வேண்டும் என்பதற்காக ...
அவனை மணம் முடிக்க சொன்னது -
நீ நன்றாக
வாழ வேண்டும் என்பதற்காக..!