தாயே என் உயிர் நீதானே
உன் சுவாசம்தான் என் சுவாசமாய்
உன் கருவறை என் வாசமாய்
உன் எச்சில் என் உணவாய்
உன் வலிகள் என் உணர்வாய்
உன் கதகதப்பு என் மருந்தாய்
உன் பேச்சு என் மொழி பெயர்ப்பாய்
உன் சுகத்திலும் என் பங்கு
உன் சோகத்திலும் என் பங்கு
உன் வாழ்வில் ஓர் உயிராய்
உன் அன்பென்ற சுடர் ஏந்தி
ஐயிரண்டு திங்களாய் உன் வயிற்றில்-நானும்
ஆனந்த தவம் இயற்ற இடம் தந்தவளே
இன்னும் அப்படியோர் இடம் தேடி திரிகிறேன்
மௌனம் மின்னும் இடம் கிடைக்காதா என்று ?
இறைவன் இதில் மட்டும் கஞ்சனாகிவிட்டான்-உன்
உள்ளத்தில் இடமளித்து கருவறை தவத்தை
- களைத்ததினால் !
உன் உடலுக்குள் என் உடல் சிலகாலம்
- பயணித்ததால்
நீதான் என் முதல் உலகம் !
உன் இதயத்துடிப்பில் என் உயிர்
- உருவானதால்
நீதான் என் முதல் உயிர் !
***********************************************************
விலைமதிப்பற்ற பெண்இனத்திற்கு
இக்கவி சமர்ப்பணம் ...................................
************************************************************