கவிதை இலக்கணம்
நான் எழுதிய
கவிதை
காகிதத்தில் மட்டும்
காவியம்
சிந்தனைக்கு மட்டும்
ஓவியம்
கட்சிக்கு மட்டும்
உருவகம்
கற்பனைகள் பல
ஓடி நாளும்
நான் எழுதும்
கவிதை
நல்கியது என்ன ?
வீணர்களும்
வெட்டி ஞாயங்களும்
பேசிடத்தான் போலும்...!
கவிதை செய்துவைத்தேன் நாளும்.....?