தவிர்க்கிறாய் நீ....தவிக்கிறேன் நான்....

மீண்டும் நீ நாளை ....ஊர் செல்கிறாய்....!
தொடங்கி வைக்கிறேன்..நான்...நம் பிரிவை....
இதழோரம் புன்னகையோடும்.....
இரண்டு துளி கண்ணீரோடும்!
இது வரை தூரம் ஒரு பிரிவாய்இருந்ததில்லை...!
என் கண்கள் பார்த்து ...நீ...பேச ....தவிர்த்ததில்....
என் கண்கள் கலங்கியதை நீ ஏனோ உணரவேயில்லை!
காரணம் புரியாமல் தவித்ததையும் ....நீ காணவேயில்லை...!
நான் "உள்ளே" இருக்கும் போதும் ....உன் நினைவில் ...
வெளி ...உலகெல்லாம் சுற்றித்திரிந்தேன்....!
வார்த்தையில் அடங்கா அந்த சந்தோசங்கள் ...
நம் பிரிவை உணர்த்தியதேயில்லை... அப்போது!
முன்பெல்லாம் பேசுவாய் எப்போதுமே....மனம் விட்டு!
இப்போதும் பேசுகிறாய் ...மனதை விட்டுவிட்டு...!
தவிர்க்கிறாய் நீ....
தவிக்கிறேன் நான்...!

எழுதியவர் : (20-Nov-10, 10:05 pm)
பார்வை : 1068

மேலே