காசநோய்
கையில்
காசு இருந்தாலும்
காக்க வழி
ஏதும் இன்றி
காளன் வரவை
எதிர் பார்க்கும்
காசநோய் !
மருந்தையே
உணவாக
உட்கொண்டாலும்
மரித்தல்
மாறாது எனக்
மரணம்
சொல்லும் !
இன்றே இந்நோயை
ஒழிக்க வேண்டின்
விழிப்புணர்வு
எல்லோரும்
கொள்ளுதல்
வேண்டும் !