நாம் யார் ?

மலர்களே !
வெற்றிகள் உண்டு
தோல்விகளைக் கண்டு
மனம் தளராதே ...உனைக் கண்டு
கஜினி கோபித்துக் கொள்வான்
துணிந்து நில்...!

மலர்களே !
போராட்டம்தான் வாழ்க்கை
மனம் மயங்காதே ..உனைக் கண்டு
போராட்ட வீரர்கள் அம்பு விடுவான்
துணிந்து நில் ...!

மலர்களே !
உழைப்புதான் நம்பிக்கை
சோர்ந்து போகாதே
வரிசையில் செல்லும் எறும்புகள்
உனைப் பார்த்து ஏளனம் செய்யும்
துணிந்து நில்...!

மலர்களே !
நீதி நிச்சயம்
அநீதியைக் கண்டு
புலம்பாதே மனதில்
அன்பாய் அரவணைத்து வாழ்ந்திடு இல்லையேல்
உறவுகள் ஏசிடும்
துணிந்து நில்...!

எழுதியவர் : ஜெய ராஜரத்தினம் (9-Mar-13, 8:47 am)
பார்வை : 105

மேலே