அந்தி மாலை ஆதவனோ !

வசந்தனோ வசீகரனோ
வானத்தை வளைத்து
கையில் தருபவனோ
வானவில்லின் வண்ணங்களை
என் நெஞ்சில் இறைப்பவனோ
ஒரு மௌனப் பார்வையில்
என் இதழ்களில் புன்னகை எனும்
புதுக் கவிதை தீட்டும் கவிஞனோ
கனவுத் திரையில் மாலையை
வரையும் அழகின் ஓவியனோ
யார் இவன் ?
ஒருவேளை அந்த அந்தி மாலை
ஆதவனோ இவன் ?

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Mar-13, 8:39 am)
பார்வை : 164

மேலே