வாழட்டும் புன்னகை !

பொன் நகையால் புன்னகையா
பெண் இனத்தின் குறு நகையா
பெண் சிரிப்பில் ஒரு வகையா !
பெண் ரசித்திடும் பொழுதிலா
பெண்மை வசித்திடும் வாசலா
பெண் அகமகிழும் வேளையா !
பெண்கள் சிரிப்பது வாடிக்கை
கண்கள் பார்க்கும் வேடிக்கை
நிலைத்து வாழட்டும் புன்னகை !
பழனி குமார்