காதல் நினைவு..................!!

ஓர் பெளணர்மி இரவு,

என்னருகே நீயும்,

உன்னருகி நானும்,

உன் முகத்தின் மீதுவைத்த

என் விழிகளை நகர்த்தாமல் நான்,

என் விழிகளின் தீர்க்கத்தை

தாங்க முடியாத நீ,

நாணத்தால், தலைதாழ்ந்து

உன் கால்விரல் நகம் பார்த்து.

உன்னிதழ் அசைகிறது

ஏன்? அப்படி பார்க்கிறீர்கள் என்ற

உன் கேள்வியின் மூலம்.

கேட்டது உன் குரலா?

யாழின் மீட்டிசை குரலா?

ஒரு கணம் தடுமாறினேன்.

இதற்கு எங்கனம் நான்

மறுமொழி பகல்வது என்று,

உன்னையும், நிலவையும்

மாறிமாறிப் பார்க்கிறேன்.

நிலவுக்கு ஒளி சூரியனிடமிருந்தா?

இல்லை,,,,,,,,,,,,,,,,,,,,,

உன் முகத்தின் மூலமாகவா?

என்றேன்.

இதைக்கேட்ட உன்முகம்

வெட்கத்தில் குங்குமாக சிவந்தது.

உங்களுக்கு எப்படித்தான்

இப்படி எல்லாம் பேச

வருகிறதோ? என்று என்

மார்பில் மோதினாய்.

அது என்னிதயத்தின் ஆழம்

வரை பிரதிபலித்தது.

வெட்கத்தில் சிவந்த உன் முகம்

அதிகம் பிரகாசிக்கிறதா?

வானில் உள்ள நிலாப்பெண்

அதிகம் பிரகாசிக்கிறதா?

என்ற குழப்பத்தில்

நான்...........................

உன்னையும் நிலவையும்

மாறி மாறிப் பார்த்தேன்

சற்றே பிரமிப்போடு.................!!

எழுதியவர் : messersuresh (9-Mar-13, 12:14 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 90

மேலே