ஒரு பொன்மாலைப் பொழுது (5)

..."பொன்மாலைப் பொழுது(5)"....

ஆண் : " கண்வழி புகுந்து கருத்தினில் நுழைந்த
மின்னொளியே ஏன் மெளனம்....?"
பெண் : " மௌனம் இல்லை. யோசித்துக் கொண்டிருக்கின்றேன் நீங்கள் நேற்று என்னிடம் யாசித்ததை...."
ஆண் : " நல்ல முடிவு தானே எடுத்தாய்...? சொல்.. சொல்..."
பெண் : " ஐயே...! ஆசையைப் பாரு.. ம்ம்ம்ம்ம்ம்ம்...."
ஆண் : " உசிரே போகுது... உசிரே போகுது உதட்டை நீ கொஞ்சம் சுளிக்கையிலே..."
பெண்: " போதும்.. என்ன திரைப்பாடல்களின் வரிகளை இரவல் வாங்கி என்னிடம் ஒப்புவிக்கிறீர்களா?"
ஆண் : " ஆமாம். ஒவ்வொரு வரியும் உமக்காக.. எமக்காக எழுதியதை போல் இருக்கின்றது..."
பெண் : " என்னதான் இனிமையாக இருந்தாலும், உமது திருவாய் மலர்ந்து கூறும் கவிதையின் இயல்பே ஒரு சுகம்தானே...?"
ஆண் : " சரி... கவி.. இந்தக் கவிதைக்குப் பதில் சொல்லடி.."
பெண் : " ம்ம்ம்...."
ஆண் : "நான்கு இதழ்கள் பேசிடும் கவிதை ஒன்று சொல்லேன்"
பெண் : " எப்படி.... எப்படி...?"
ஆண் : " பதில் சொல்... இல்லையெனில் பதிலுக்கு கொடு.."
பெண் : " ஓ.. அப்படியா..! நான்கு இதழ்கள் பேசிடும் கவிதை எனக்கு தெரியாது.. ஆனால் இரண்டு இதழ்கள் பேசிடும் இரு வார்த்தைக் கவிதை தெரியும் சொல்லவா...?"
ஆண் : " சொல் கவி.."
பெண் : " போய் வருகிறேன்..."
ஆண் : " அதற்குள்ளாகவா...? இப்படி என்னை மலையுச்சிக்கு கொண்டு சென்று, கீழே உருட்டி விட்டாயே...!"
பெண் : " ஹாஹா...."
ஆண் : " உன்னிடம் மன்றாடியதற்கு பதில், இதோ இந்த தென்னைமரத்தை முட்டியிருந்தாலாவது, சில தேங்காய்கள் உதிர்ந்திருக்கும்...!"
பெண் : " அதை முதலில் செய்யுங்கள்..... தாக சாந்திக்கு சில இளநீராவது கிடைக்கும்..."
ஆண் : " கவித்த்த்த்த்தா.. கவிதாயினினினி......"
பெண் ; " என்ன்ன்ன்ன... என்னாங்க....
ஹாஹாஹா......
ஆண் : " கல்நெஞ்சுக்காரி..."
இன்றும் ஏமாற்றிவிட்டு போய் விட்டாயே...!!!!!

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (9-Mar-13, 9:18 am)
பார்வை : 120

மேலே