ஒரு பொன்மாலைப் பொழுது (4)

"ஒரு பொன்மாலைப்பொழுது" (4)
பெண் : "வணக்கம்.... யார் அழைக்கின்றது..?"
ஆண் : " வணக்கம் கவிதா..., கண்ணன் பேசுகிறேன். நான் எவ்வளவு நேரமாகக் காத்திருக்கின்றேன்.. ஏன் இன்னும் வரவில்லை....?"
பெண் : " என்னால் வர இயலாது..."
ஆண் : "ஏன்...?
பெண் : " மனம் சரியில்லை"
ஆண் : " ஏனம்மா... என்னாயிற்று..?"
பெண் : " சுகமெல்லாம் விலகி, சோகமெல்லாம் குடி வந்து விட்டது..."
ஆண் : " என்ன மனுஷியம்மாநீ... சோகத்திலும் கவி பாடுகிறாய்.. சரி, சரி சொல்... உன் வேதனையில் நானும் பங்கெடுக்கின்றேன்..."
பெண் : " எப்படி சொல்வதென்று தெரியவில்லயே..."
ஆண் : " உன் பிரட்சனை என்ன சொல்லடி... உன் குரலில் காணும் சோகத்தை என்னால் தாங்க முடியவில்லை கண்மணி"
பெண் : " நான் ஆசை ஆசையாக வளர்த்த...."
ஆண் : "ஆசை ஆசையாய் வளர்த்த... எது..? ஓ.. அணில் பிள்ளையா? ஏன் அதுக்கு என்னாயிற்று?"
பெண் : "அது நன்றாகத்தான் இருக்கின்றது. இது வேறு..."
ஆண் : " என்னவென்று சொல்லடி...!"
பெண் : " நான் ஆசை ஆசையாக வளர்த்த என் விரல் நகங்கள் துணி துவைக்கும்போது உடைந்து விட்டன..ம்ம்ம்."
ஆண்: " அடிப்பாவி....! விரல் நகங்கள் உடைந்ததற்கா இந்த ஓலமும், ஒப்பாரியும்?
பெண் : " ஹாஹா... என்ன பயந்து விட்டீர்களா?"
ஆண் : " பயமா..? பதறிவிட்டேனடி..., ஏன் இந்த நாடகம்?"
பெண் : " கடந்த வாரம் என்னைச் சந்திக்க வராமல் ஏமாற்றினீர்கள் அல்லவா? அதனால்தான்..."
ஆண் : " வராத காரணத்தை தான் விளக்கி விட்டேனே.."
பெண் : " காரணம் ஆயிரம் இருக்கலாம், கலங்கியது என் மனமல்லவா...!
ஆண் : " கொஞ்ச நேரம் என்னைத் துடிக்க வைத்து விட்டாயே.. கள்ளி... இரு.. இப்பவே வீட்டிற்கு வருகிறேன்.."
பெண் : " தாராளமாக வாருங்கள்.. தலைவாழை இலைப் போட்டு முறை செய்ய என் வீட்டு பெரியவர்கள் காத்துகிடக்கின்றார்கள்.. ம்ம்ம்.. அப்படியே வரும்போது, உங்கள் துணைக்கு சிலரை அழைத்து வாருங்கள்.... "
ஆண் : "இப்படியெல்லாம் பேச உனக்கு மனம் வருதா?.."
பெண் : " வரவில்லைதான்.... ஆனால் வரவழைத்து விட்டேன் ..இப்போது தொலைபேசி அழைப்பை துண்டிக்க போகிறேன்.. தனியே அமர்ந்து புலம்பாதீர்கள்.."