ஒரு பொன்மாலைப் பொழுது (3)

..."இது ஒரு பொன்மாலைபொழுது"...(3)

ஆண் : "கடற்கரை மணலில்
உன் பெயரை எழுதினேன்...
அலை வந்து அடித்துச் சென்றது,
முத்துக்கள் கடலுக்குத் தான்
சொந்தம் என்று......!"
பெண் : " ஹாஹா!! என்ன கவியே,, ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றதே...".
ஆண் : " என் மனவானில் இனிய நிலா நீ,,, உன்னைப் பற்றி எழுதுகையில் என் கவிதை சோடை போகுமா என்ன?"
பெண் : "பரவாயில்லையே, இந்த கோடை காலத்தில், குளிர் தென்றாய் மனதை குளிர வைக்கின்றது உங்கள் கவிதை..."
ஆண் : "அப்படிச் சொன்னால் எப்படி? எனக்கொரு கவிதை சொல்லடி... கண்மணி..."
பெண் : "பெண் கவியிடம் மோத வந்த ஆண் கவியா நீங்கள்?
ஆண் : " அப்படியெல்லாம் இல்லை.. பேச்சை மாற்றாமல் என் ஆதி முதல் அந்தம் வரை குளிர்ந்து போகும்படி ஒரு கவி சொல்லிடு ... சொல்லடி.....!"
பெண் : " ம்ம்ம்...." "எனக்கானவன் நீ என்று
முடிவு செய்த கணத்திலிருந்து,
உனக்கான இவள்,
உறங்கும் நேரம் தவிர்த்து,
உன் நினைவென்னும்
போர்வைக்குள் நிதம் நிதம்
சுகம் காண்கிறாள்......"
ஆண் : " சபாஷ்டி... கவிழ்த்து விட்டாயே என்னை. நீ மீட்டிய ராகத்தில் என் மேனி புல்லரித்து விட்டதடி..."
பெண் : "அது எப்படி? கடற்கரையில் மணல்தானே இருக்கின்றது... புல் இல்லையே? "
ஆண் : " கள்ளி , என்ன கிண்டலா...?"
பெண் : " இல்லை சுண்டல் வேண்டுமென்று சொன்னேன்...."
ஆண் : " அடுத்த சந்திப்பில் சுண்டல் கடையே வைத்து தருகின்றேன்... இன்று ... எனக்காக..."
பெண் : ஹாஹா... முதலில் சுண்டல் கிடைக்கட்டும் .... நான் வருகிறேன்....வருவேன் நிச்சயம். ...."

எழுதியவர் : மகேஸ்வரி பெரியசாமி (9-Mar-13, 9:06 am)
பார்வை : 72

மேலே