சில நேரங்களில்...
அவரவர்
வீட்டில் இறந்தவர்
எவரும் பேயாவதில்லை...
எப்படி பேய்கள்?
உட்கார்ந்தால் போதும்
சாலை வெட்டும் பணியாளனுக்கு...
நடக்க வேண்டும்
தொப்பை கட்டிய அலுவலனுக்கு ....
மௌனம் சம்மதம்
சம்மதம் இல்லாததும்
சில போது மௌனமாய்....
காதலோடு அல்ல...
காசோடு கட்டியணைத்தால் தான்
அவளுக்கு பிடிக்கிறது ....
நிலவு
கோள் ஒருவனுக்கு
பால் ஒருவனுக்கு....
எழுதிய கவிதை எழுதியவனது....
எழுதாத கவிதை?
பூக்களில்லாத
பூந்தோட்டத்தில்
பூச்சூடுகிறது...
பெயர் மட்டும்
கடவுளுக்கு மூன்று கண்
மூன்றாவது கண்ணை காட்டச் சொல்லும்
குழந்தைக்கு முதலில்
கடவுளை காட்டுங்கள்....
தேநீரும், அந்தி மழையும்
இரவில் எமிலியாக வேலை செய்யும்
காயத்ரிக்காக அல்ல...
இணையம் காட்டும்
நிர்வாணங்களில்
ஆடை பிடிக்காமல் போகிறது அவனுக்கு...
சாலை வாசியின்
கனவில்
கண்ணாடி மாளிகை கழிப்பிடம்...
விடியாத இரவுகள் மரணத்திற்கானது
மரணத்திற்கான இரவுகளில்
தெரிவதில்லை விடியல்கள்....