ஒருவாய்ச் சோறு
கோபுரங்களில்
அழகாய் நிற்கிறாய்
கோவிலுள்ளே
சிலையாய் நிற்கிறாய்
வீதி தோறும் விழா எடுத்து
உலா வருகிறாய்
ஏழையின் குடிசையை
ஒருமுறை பார்த்தால் என்ன
அவர்கள் கண்ணீரைத் துடைத்தால் என்ன
ஒவ்வொரு நாளும் ஒருவாய்ச் சோறு
தந்தால் நீ குறைந்தா போவாய் இறைவா !
~~~கல்பனா பாரதி~~~

