கவி இளங்கோவின் அரண்மனை......

மக்கள் மன்னனை
எழுதியதை கடந்து
மன்னன் எழுதிய
மக்கள் வரலாறு .....
.....................................................
ஒரே குடையின் கீழ்
முத்தேச ஆளுகை
சிலம்பின் அதிகாரம்.
....................................................
கோவின் குற்றத்தை
கோட்டையில் உரைத்து
நீதி பெற்றவளின்
தனித்த வீரம்
எழுதின ..
பெண்ணுரிமைகளின்
முன்னுரைகளை ......
..............................................................
ஒற்றை மார்பை
பற்றி எறிகையில்
பற்றி எரிந்தது
பாவம் சுமந்த
கூடல் நகரம் ...
பெண்மை போற்றிய
பாண்டிய பூமி...
....................................................
பக்ஷேகழுகுகளின்
பவுத்த வெறிகள்
மாதவியின் கால்களில்
மண்டியிட்டு கற்கும்
நேசம் உரைக்கும்
சிலம்பின் ஒலிகளை ....
..................................................
புலம்பெயர்ந்தவர்களின்
நீதிக்காக
சரிந்த வெண்குடைகளில்
வெட்கி தலைகுனியும்
ஈழ அகதிகளை
முகாமில் சிறைபடுத்தும்
செங்கோட்டை தத்துவங்கள் ...
..........................................................
இன்னும் ஒளிரும்
சிலம்பு கோட்டையின்
நீதி ஒளிகளில்
கண்கூசி நிற்கும்
கண்கட்டி கொண்ட
நீதி தேவதைகள் ...
..........................................................
காலத்தால் மறையா...
காவிய பூமியில்
புற்களாகவே...
பதிந்து விடுகின்றன
வாசிக்கும் விழிகள் அனைத்தும்
...................................................

எழுதியவர் : sindha (10-Mar-13, 12:52 pm)
பார்வை : 125

மேலே