என் புலம்பல்

எதிர் கொண்ட தீமை
எதிரியாய் எனக்குள்ளே செல்ல
துரத்திவிட்டேன் உன்னை (நன்மையை)
ஏற்றுக்கொண்டேன் அவனை (தீமையை)

சொல்லாமல் வந்தாய்
மெல்ல மெல்ல நுழைந்தாய்
இதம் தந்தாய் சுகம் கண்டேன்
இடம் கேட்டாய் மனம் கொடுத்தேன்

வானமாய் விரிந்தாய்
மேகமாய் திரிந்தாய்
தீயவை தெகட்டவில்லை
தீண்டியதும் வலிக்கவில்லை
எரியாத தீக்காயம்
எரித்தும் போகவில்லை
நற்குணம் யாவும் நம்மிடம் இல்லை

புண்படவில்லை
புகைப்போட்டு விட்டேன்
கண்ணனாகவில்லை கன்னியை
தேடிவிட்டேன்
மயக்கம் வந்தும் மது அருந்திவிட்டேன்
மயங்கமால் மனசை கொடுத்துவிட்டேன்
மதி இழக்க வைத்த மன்னனிடம்

தீமையை துரத்த
நன்மையை அழைக்க
இருள் போல என்னுள்ளே தீமை.
வெளிச்சமாய் என் வெளியே நன்மை.
வெளிச்சமே வந்துவிடு !
இருளை போக்கிவிடு !

எழுதியவர் : மணி (10-Mar-13, 3:42 pm)
சேர்த்தது : manikandan sugan
பார்வை : 140

மேலே