திருமண வகைகள்

திருமண வகைகளாக 8 வகைகள் உண்டு ..

1) திருமணவயது அடைந்த பெண்ணை பெற்றோர்
தகுந்த ஆடவனிடம் கையில் ஒப்படைப்பது -திருமணமன்றல்-எனப்படும்

2) தலைவனும் தலைவியும் தாமே சிந்தித்து திருமணம் செய்வது -நறுமண மன்றல் - ஆகும்

3) கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது -கடிமண மன்றல் - எனப்படும்

4) கலப்பு திருமணம் செய்வதை -முறைமான மன்றல் -என்பர்

5) வீரவிளையாட்டின் மூலம் வென்று திருமணம் செய்வதை -அருமண மன்றல் -என்பர்

6) மன்னர் காலத்தில் பகைவரைவென்று மகளை திருமணம் செய்வது -பெருமண மன்றல்- என்பர்

7) ஊழ்வினைப்பயனால் பெற்றோர்களால் இருவரும் இணைவது -தெய்வமான மன்றல் -

8) பால்ய மணமுறையை -சிறுமண மன்றல்-
என்பர் ...

இவையே நாளடைவில் பிரம்மம் ..கந்தர்வம் ..அசுரம் ..என சுருங்கி வந்துள்ளதாம் ...

நன்றி : ராதா பரிமளம் ..(சஞ்சிகை )

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (10-Mar-13, 4:26 pm)
பார்வை : 338

சிறந்த கட்டுரைகள்

மேலே