நில்லாமல் ஓடி போ......

அம்மா காண்பித்த
நிலாதான்
அது,
அப்போ
பாட்டி சுட்ட
வடையின்
வாசனைக்கூட
வந்தது,

நான்,
வாய் திறக்க
அதோ பாட்டிக்கூட
கேட்கிறாள் பார்,

அஸ்கு புஸ்க்கு
என் புள்ளைக்குதான்
மம்மு,,,
பழிப்பு காட்டி
பாதிக்கவளம்
பருக்கை சிந்தலுடன்
ஊட்டியதும்

நமட்டு சிரிப்புடன்
நகரும் பாட்டியும்
தெரிந்த நிலா தான்
அது,

இன்றோ!!

திருகில் உதிரும்
மாவாய்
சிதறி
போனது

அம்மா,
எனக்கு காட்டியதை
அவளுக்கும்
காட்டினேன்

நிலவை என்
தலையில்
கட்டிவைத்து
போய்விட்டாள்
போகும் இடமெலாம்
கூட வருவதுபோல்
தோன்றும்
எண்ணம்போல்????

எழுதியவர் : சபீரம் sabeera (11-Mar-13, 3:19 am)
பார்வை : 68

மேலே