மண்ணில் வாழ ஆசைப்பட்ட தமிழன் மண்ணினுள் வாழ்ந்து கொண்டிருக்கிறான்

புத்த தேசம்
கை நீட்ட
காந்தி தேசம்
கை தட்ட
வெள்ளையரிடம்
விடுதலை கேட்ட -நீ
கொள்ளையரிடம்
கூட்டு சேர்ந்தது
எப்போது ?
இனம் அழிவதை
இ-மெயிலில்
ஈசி சேரில் அமர்ந்து
ரசிக்கிறோம்
கையில் சிநாக்சொடு
இளவரசிக்குத்தான்
இறைவன்
ஈழத்து பெண்கள்
மானத்தில் இல்லை
அன்றாட வாழ்வில்
அறுசுவை உணவா
கேட்டோம்
ஒதுங்கி வாழ
ஓர் எல்லைதானே
பள்ளிகளில் விளையாட
வேண்டிய பிஞ்சுகள்
பிணங்களுக்குள் தேடி
தொலைகிறது
அம்மாவை காண
பொய்யில்லை
கொலையில்லை
கொள்லையில்லை
எல்லைதானே
இதற்காய்
இந்த இன படுகொலை
பள்ளி குழந்தைகளுக்கு
பாஸ்பரஸ் குண்டு
கல்லூரி மாணவிக்கு
கற்பழிப்பு
தமிழன் மார்புக்கு
துப்பாக்கி தோட்டா
இத்தனை பரிசு தந்த
இலங்கைக்கு
இந்தியாவில் விருந்து
எங்கள்
கைகளை கட்டி
கண்களை பொத்தி
போரிட்டாய்
நீதானே
மாவீரன்
ஆபத்து என்றல்
அக்றினையும்
ஆயிதம் ஏந்தும் -நாங்கள்
உயர்தினையே!