என்று வருவாய் என் நண்பா...?

டீக்கடைகள் தீக்கரைகளாய்...
புறம்தள்ளிப் புன்சிரிக்கின்றன...
வட்டமேசையில் நாம் கூடி...
வம்பளந்த நம் இடமோ...
புதிதாய் வயதுக்கு வந்த...
பருவ இளைஞர்களின் பாசறையாகியது...
இளசிங்ககூட்டத்தின் இடையே சிக்கிய...
முதிர்இளஞ்சிங்கமாய் ஓரமாய் ஒடுங்கிப் போய்...
மௌனமாய் நம் நினைவுகள்...
அசை போடுகிறேன்...
வம்புகள் வந்தால்...
நுனிமூக்கில் கோபங்கொண்டு...
எதிராளியின் படைபலம் கண்டு...
என் நண்பர்கூட்டம் இல்லாததை உணர்ந்து...
சிங்கம் நானோ சிறுநரியாய்...
விவேக ஆயுதம் கையிலேந்தி...
சராசரி மனிதனாய்
விலகிச் செல்ல பழகிக் கொண்டேன்...
நண்பா உன் பிரிவால்...
நட்பின் இலக்கணம் தெரியாமல்...
நண்பர்களாய் சுற்றித் திரிந்து...
காலத்தின் ஓட்டத்தில்...
கடமைகளின் கட்டாயத்தால்..,
நீயோ...
திரைகடலோடி திரவியம் தேடிட...
நானோ...
முத்துநகரில் முக்குளிக்கச் சென்றேன்...
வாழ்க்கை ஓர் வட்டமாம்...
ஆதிப்புள்ளியின் ஆரங்களாய்...
வில் ஏவிய அம்புகளாய்...
புறப்பட்டோம் திசைக்கொருவராய்...
ஆரமாய் பரிதியை அடைந்து...
எதிரெதிர்
சந்திக்கும் தருணம்...
எதிர்நோக்கி...
பயணம் தொடர்கிறேன்...
என்னதான்...
வலைதளங்களில் நட்பின் தொடுதலில்...
லயித்திருந்தாலும்...
வலைக்குள் சிக்காத நீராய்...
நழுவிச் செல்கின்றன...
இக்கால நம் நட்பின் தருணங்கள்...
தூரமாய் நிற்கும் உன்
தோள்களை தேடுகிறேன்...
தோள்மேல் தோள்போட்டு...
என் மனபாரம் இறக்கிட...
என்னதான் தொலைத்தொடர்பும் வலைத்தளங்களும்...
ஊடகங்களாய்...
உள்ளக் குமுறல்கள்...
உன்னிடம் சொல்ல உதவினாலும்...
என் தோள்பற்றி ஆறுதல் தந்த...
உன் ஒற்றைப் பரிசத்திற்கு ஈடாகவில்லை...
ஆயிரம் மின்னஞ்சல்களும்...
அறுபது நிமிட அலைபேசி உரையாடலும்...!
என்று வருவாய் எதிரே...
என் நண்பா...!

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (12-Mar-13, 3:45 am)
பார்வை : 456

மேலே