என் இதயத்தை எடுத்துக்கொள்

நீ குளிர்காய்வதற்காக
நான் என்னையே எரித்துக்கொள்வேன்
நீ வாழ என் மூச்சை எடுத்துக்கொள்
நீ உன் தோழிகளோடு செல்லும்போதும்
எனக்காக திரும்பிப்பார்க்கும்
அந்த நிமிடத்திற்குள்
என் இதயம் இறந்து பிறக்கிறது
என் நினைவுகளுக்கு முதுமையில்லை
அதில் நீயிருக்கும்வரை.
என் இதயத்தை எடுத்துக்கொள்
என்னை இதயமில்லாதவன்
என்று எவர்நினைத்தாலும் பரவாயில்லை.

எழுதியவர் : (12-Mar-13, 1:34 pm)
சேர்த்தது : RathikaGuhan
பார்வை : 58

மேலே