என் உலகம் எங்கே
நான் சுற்றி சுற்றி வந்தாலும்
என் உலகம் தெரியவில்லை
நீந்துவது தண்ணீரிலே
கலங்குவது கண்ணீரிலே
மாட்டி கொண்டேன்
தூண்டிலிலே
தவறி விழுந்தேன் தரையினிலே
என் உயிரும் இப்போ
சொர்க்கத்திலே !
என் உலகம் எங்கே ?