நினைவுச் சித்திரங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
சுவரில் எழுதிய
சித்திரங்கள்
காற்றில் மழையில்
கலைந்து போகலாம்
கரைந்து போகலாம்
நெஞ்சில் நீ வரைந்த
சித்திரங்கள்
இதயத் தென்றலில்
நித்தியமாய்
கலையாத அந்தி மாலையாய்
நினைவுச் சாரலில்
புதிது புதிதாய்
வண்ணங்களுடன்....
~~~கல்பனா பாரதி~~~