வேசியானதற்கு யார்தான் பொறுப்பு ?????

.

வேலையொன்றிருக்குமானால்
வேசிகள் யாருமில்லை..
வறுமையும் ,வன்மையுமே
வரையுது வேசியரை.....

வேசை வெறிப் பயல்களின்
விபரீதம் அஞ்சியே.
ஓசையின்றி ஒதுங்கினாள்
ஒரு நாளே.
மோசம் போன அந்நாளே
முத்திரையோ.................. !..
வாசமில்லா மலராக்கி
வேசியெனும் பேராக்கியதே ..

வேசியெனக் கல்லெறிந்தே..
தாசியென்கிறார்..
தேவைக்குத் தின்றுவிட்டுத்
தேவடியா ளென்கிறார்...............
கூசாமல் பழி சொல்கிறார்.......
குற்றம் யாரிடம்??

வாழ்விழந்த அவளுக்கினி
வறுமைதானுறவோ......................!!
பிச்சசை யெடுத்தாலுமவளை
இச்சை நாய்கள்--------------
பச்சை மொழி வீசிக் வீசிக்
குரைக்கின்றன...................

இடமொன்றைத் தேடியெங்கும்
படுத்தறஙக நீதமில்லை....................
தனியொருத்தி வாழ்வதற்கு
தரணியில் காவலில்லை..
அதற்கென்றே அலைகிறதே
கூட்ட மொன்று

தேவைகளைறிந்தே யவளைத்
தினமுந்தான் தேடியே.
நல்லவனாகத் தினமும்
நாடகமுமாடியே.
உதவும் வேடங் கொண்டுமே
உற்றத்தனி வேளையே.
பதமாகப் படுக்கை மொழி
பசப்புகின்றான்,

பாவமவளை வறுமையோ
வதைக்கிறது,.....................................
என்செய்வாள் அவளும் ???
யோசிக்கிறாள்.
பசியோ பத்தும்! பத்தினியையும்!
பறந்திடச் செய்யுதே ,

கெடுத்தழித்தே ஒரு முறை
கெடுத்துவிட்டானே.
இந்தச் சமுதாயம் அவளை
ஏற்றுக் கொள்ளுமோ!!

ஏசு நாதருந்தான் சொன்னாரே
எவராகிலும் உங்களலிலொருவர்
யோக்கியரானால்...........................
இவளைக் கல்லாலடியுங்கள்..
என்றே அன்று.

கல்லடிக்குந் தூய்மையெவர்க்கும்
உண்டோ அய்யா!
அழித்தவனை அழிக்காத சமுதாயம்
அழிந்தவளை மட்டுமே பழிப்பதேனோ!!

பெண்மையை விற்பவள்தான்
வேசியென்றால்..........................
ஆண்மையைத் துர்பிரயோகம்
செய்பவன் யார்.........................??????

கற்பென்பது இருபாலருக்குமே
பொதுவானதுதானே??
கவிஞனுந்தான் தெளிந்து நன்று
சொன்னானே.........................................!
வேசி எவரும் பிறப்பதில்லை...
வேசிக்கான சூழல்களே பிறககின்றன..

அரசாங்கம் உதவட்டும்.!
அவர்களும் மீளட்டும்!

எழுதியவர் : கவிஞர்.கொ.பிச்சையா (14-Mar-13, 7:38 pm)
பார்வை : 237

மேலே