கனாக்காலம்
கனாக்காலம்
============
நேத்து வேலைக்கு கிளம்பறப்போ
பக்கத்து வீட்டு ரமேஷ் அண்ணா
முதுகு லேசா வலிக்குதுன்னு சொன்னானே
ஓடிப்போயிப் பார்த்தா என்ன :o :o
கோயில் வாசல்ல எப்போவுமே பூவித்துகிட்டு
இருப்பாங்க ராசாத்தி பாட்டி
அய்யய்யோ
இன்னைக்கு மழ பாவம்
அவங்களுக்கு வீடு இருக்கா
என்ன பண்றாங்கன்னு தெரியலையே :/ :/
எப்போவுமே தெருமுனையில
செருப்புத்தெய்க்கிற கணபதி தாத்தாவ
யாரோ பைக் காரன் இடிச்சிட்டான்
மறுபடியும் எப்பவருவாரு :O :O
ஸ்கூல் வேன்ல போறப்போ அங்ங்ங்ங்க
ஒரு பட்டம் கரண்டு கம்பத்துல
சிக்கி கெடந்துச்சே
இப்போ அதை காணோம்
யாரெடுத்துருப்பாங்க அதை :O :O
அப்பா மடியில படுத்து
சிங்க ராஜா கதை கேக்கணும்
இன்னிக்காச்சும் நேரத்தோடு வருவாரா !!!!! :o
கிளாஸ்ரூம் பின்னாடி
ஒரு நாய்க்குட்டி
காலு அடிப்பட்டு கிடந்துச்சு :) :)
எங்க போச்சோ தெரியல
கொஞ்ச நாளா காணோம் ,,
ஜன்னல் வழியா எட்டி எட்டி பார்த்தும்
காணலையே :o :o :o
ரப்பர் வச்ச பென்சில்
நாலன்னம் எடுத்துட்டு போகணும் :/ :/
ஸ்கூல் க்கு
எல்லோருக்கும் எழுத குடுக்கணும்
வெண்ணிலாவுக்கு மட்டும் குடுக்கக்கூடாது >:(
அவ அன்னைக்கு மழையில
நடந்து வர்றப்போ என்னோட
ரெயின் கோட்டுல கிறுக்கி வச்சுட்டா :( :(
அந்த பட்டர்ஃப்ளே இருக்குல்ல ம்ம்ம் அன்னைக்குப்பூரா
என் வெள்ளை சட்டைமேலதான் இருந்துச்சி :/
சட்டை கலரு மாறவே இல்ல
கொஞ்சமா காத்து வீசியிருக்கலாம் :/ :/
அய்யய்யோ நேரமாச்சு
அக்கம்மா கத்துவா
சீக்கரம் கிளம்பணும்
ஆமா ஸ்கூல் வண்டி வர்ற நேரமாச்சு,,ம்ம்ம்ம் ,, :( :(
வண்டியில ஏத்தி விடுற
பாலா அண்ணாவுக்கு கை அடிப்பட்டுச்சே
இப்போ எப்படி இருக்காரோ பாவம் :( :(
அனு பாப்பா ,,,