சில அத்துமீறல்கள்

என் தம்பியிடம் இருந்து
அவனுக்கு தெரியாமல்
அவன் உடைகளை எடுத்து
நான் உடுத்துவதில் மட்டுமல்ல
யாரும் பார்க்காதபோது
உன் கன்னத்தை கிள்ளுவதிலும்
சில அத்துமீறல்கள்
சிக்னலில் மஞ்சள் கோட்டைத்தாண்டி
என் இருச்சக்கரவண்டியின்
முன் சக்கரத்தை நிறுத்துவதில்
சில அத்துமீறல்கள்
அம்மா சமைக்கும்போது
ருசிபார்ப்பதாய் சொல்லி
ஒன்றுக்கு இரண்டாய் வடைகளை
எடுத்து உண்பதில்சில அத்துமீறல்கள்
மழை கோட்டும் நேரத்தில்
கொடையிருந்தும் மழையில்
நனைவதில் சில அத்துமீறல்கள்
கோயிலுக்கு செல்வதாய் கூறி
உன்னைக்காண சிலைக்கு முன்வந்து
உன்னைப்பார்த்தபின் நானே சிலையாய் நிற்பதில்
சில அத்துமீறல்கள்

எழுதியவர் : (16-Mar-13, 8:55 am)
சேர்த்தது : RathikaGuhan
பார்வை : 83

மேலே