வேண்டாம் சுனாமி!

கால்களைக் கழுவுகிறாய்.
கரவோசை எழுப்புகிறாய்..
வரவேற்புச் செய்கிறாய்..
வந்திருப்போன் கவிஞனென்றோ!
நன்றி!நன்றி!வாழி நீ!
நானுமுன்னைப் பாடுகிறேன்..
ஆனாலும் கோபம்தான்.........
அனுப்பியதேனோ சுனாமியை!
உயிர்கள் யாவும் உன்னில்தானே
உதயம் செய்தாய் ஆதியிலே.
தாயான நீயே எம்மை
தவிக்கச் செய்தல் நீதியாமோ!
உணவளிக்கும் களஞ்சியமே!
உரிய தேவைப் பொக்கிசமே!
கரையில்லாக் கருணையே!
கடலம்மா வாழ்க நீயே.!
வானந் தந்த நிறமழகு.
வணங்குமவன் செயலழகு.
காற்றனுப்பும் உன்னலைகள்
கானம் பாடும் இசையழகு.
கூடியெழுகிற கதிரவனழக
ஓடித்துள்ளும் மீன்களழகு.
மயக்குமினிய மதியொளியழகு.
மௌனம் பேசும் காற்றுமழகு
இனியொரு சுனாமி
எப்போதும் செய்யாதே..!
துணை காப்பாய் நீயம்மா!
இணையில்லாதாயம்மா!