படித்ததில் பிடித்தது....

பள்ளி, கல்லூரிகளில்
பீட்ஸா... பார்கருக்கு தடை!

''நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கேன்டீன்களில்... 'ஜங்க் ஃபுட்' எனப்படும் மேல்நாட்டு உணவு வகைகள் மற்றும் மற்றும் கார்பனேட்டட் பானங்கள் (பிரபல குளிர்பானங்கள்) விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும்'' என்று இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

''ஜங்க் ஃபுட் மற்றும் கார்பனேட்டட் பானங்கள் போன்றவற்றில் தேவையற்ற பொருட்களே அதிகமாக இருக்கின்றன. இவை குழந்தைகளின் உடல் நலம் மற்றும் மனநலத்தை பாதிக்கும். இவை, ‘ஆரோக்கியமற்ற உணவு’ என்கிற வகையில் வரும். எனவே, அவற்றை கல்விக் கூடங்களில் விற்பதைத் தடுக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்றவற்றிலிருக்கும் நன்மைகளை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். இத்தகைய உணவுகளை சாப்பிட ஊக்குவிக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறது சுகாதாரத் துறை அமைச்சகம்.

இதை வரவேற்றிருக்கும் மருத்துவ நிபுணர்கள் பலரும், ''பர்கர், பிரஞ்சு ஃபிரைஸ், பீட்ஸா மற்றும் கார்பனேட்டட் குளிர் பானங்கள் சாப்பிடும் போக்கு குழந்தைகள் மத்தியில் அதிகரித்துள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட ஆபத்தான நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடும். இந்த வகை உணவுகளைத் தவிர்த்தால்... குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களின் உடல் நலனை பாதுகாக்க முடியும்'' என்று கூறியுள்ளனர்.

எழுதியவர் : சாந்தி (16-Mar-13, 5:32 pm)
பார்வை : 97

மேலே