மரணம்
![](https://eluthu.com/images/loading.gif)
இனிதாய் வாழ்ந்த வாழ்வு,
பெருந்துயரம் ஆனது ஏனோ....?
கண்ணில் ஓரம் நீர் கசிவு,
காலம் எனக்குத் தந்தது ஏனோ...?
சிரித்துப் பேசிய நாட்கள்,
இன்று சுவடுகளாய் மறைந்தது தானாய்.....
பாவம் செய்த பிள்ளையா....?
தனிமைலோகம் வாட்டுதே......
விடிந்தப் பிறகும் எந்நாளும்,
என்னுலகம் இருளாய் கிடக்கிறதே.....!
வாழ வேண்டிய வயசில்,
சாம்பலாய் கரைந்துப் போனேன் காற்றில்....!
எவருக்கும் கிடைகாதப் பரிசா.....?-மரணம்,
எனக்கு வரமா,இல்லை சாபமா....!