அனாதை
தோற்று விடுவேன் என்றும் தெரிந்தும் கூட
உன் பின்னால் வருகிறது என் கால்கள்
உன் பாதங்கள் வரையும் கோலங்களுக்கு
என் கண்கள் கவிதை எழுதுகிறது
தோல்விகளிலும் ஒரு சுகம் இருக்கிறது என்று
உன்னை காதலித்த பிறகுதான் உணர்ந்தேன்
வானவில் கரைத்து விடலாம்,
மேகங்களும் கரைந்து விடலாம் ஆனால் என் காதல் கரையாத வானம் - எப்பொழுதும் கரையது
உன் பார்வை முள் என்றால் குத்தி விடு
என் இதயத்தில் அம்பாக
உன் வார்த்தை இடி என்றால் ஏவி விடு
என் உயரில் தீர நோயாக
நீ என்னிடம் சேரும் வரை என் காதல் அனாதைதான் (நண்பனின் நினைவாக )