கவிஞர்கள் அறிய வேண்டிய ஓசை சொற்கள்..வாரீர்..! (அகன் )

கவிஞர்கள் அறிய வேண்டிய ஓசை சொற்கள்..வாரீர்..!

கணகம் ­= ஒரு படைப்பிரிவு
கனகம் ­= பொன்
கணப்பு ­= குளிர்காயும் தீ
கனப்பு ­ =பாராம், அழுத்தம்
கணி ­ =கணித்தல்
கனி ­= பழம், சுரங்கம், சாரம்
கணம் ­= கூட்டம்
கனம் ­ =பாரம்
கண்ணன் ­ =கிருஷ்ணன்
கன்னன் ­ =கர்ணன்
கண்ணி = ­ மாலை, கயிறு, தாம்பு
கன்னி =­ குமரிப்பெண், உமை, ஒரு ராசி
கணை ­ =அம்பு
கனை ­= ஒலி, கனைத்தல்
கண் ­ =ஓர் உறுப்பு
கன் ­= கல், செம்பு, உறுதி
கண்று ­ =அம்பு
கன்று ­ =அற்பம், இளமரம், குட்டி, கைவளை
கண்ணல் ­ =கருதல்
கன்னல் ­= கரும்பு, கற்கண்டு
காண் ­= பார்
கான் ­ =காடு, வனம்
காணம் ­ =பொன், கொள்
கானம் ­ =காடு, வனம், தேர், இசை
காணல் ­= பார்த்தல்
கானல் ­= பாலை
கிணி ­= கைத்தாளம்
கினி ­= பீடை
கிண்ணம் ­= வட்டில், கிண்ணி
கின்னம் ­ =கிளை, துன்பம்
குணி ­ =வில், ஊமை
குனி ­= குனிதல், வளை
குணித்தல் ­= மதித்தல், எண்ணுதல்
குனித்தல்= ­ வளைதல்
குணிப்பு ­ =அளவு, ஆராய்ச்சி
குனிப்பு ­= வளைப்பு, ஆடல்
கேணம் ­= செழிப்பு, மிகுதி
கேனம் ­= பைத்தியம், பித்து
கேணி ­ ==கிணறு
கேனி ­ பித்துப்பிடித்தவர்
கோண் ­= கோணல், மாறுபாடு
கோன் ­= அரசன்
சாணம் ­= சாணைக்கல், சாணி
சானம் ­ அம்மி, பெருங்காயம்
சுணை ­== கூர்மை, கரணை
சுனை ­= நீரூற்று
சுண்ணம் ­ =சுண்ணாம்பு,,வாசனைப் பொடி
சுன்னம் ­ = பூஜ்ஜியம்
சேணம் ­= மெத்தை
சேனம் ­ =பருந்து
சேணை ­ =அறிவு
சேனை ­ =படை
சோணம் ­ =பொன், சிவப்பு, தீ, சோணகிரி
சோனம் ­= மேகம்
சோணை ­ =ஒரு நதி, சேரன் மனைவி
சோனை ­ =மழைச்சாரல், மேகம்


நன்றி : தினமணி

எழுதியவர் : (16-Mar-13, 7:48 pm)
சேர்த்தது : agan
பார்வை : 212

மேலே