பொய் சொல்ல போறேன் (மின்னல் மொட்டுக்கள்)

பொய் சொல்ல போறேன் :)

பரவாயில்லையே
இப்பொழுதெல்லாம்
உன்னிடம் நல்ல
முன்னேற்றம் காண்கிறேன்
என் பெயரை உரைப்பதை
கூட மறந்துவிட்டாய்,,,

"உன் குரலை கேட்காமல்
என்னால் இருக்க முடியவில்லையடா"
என்று அன்றுரைத்த
எதிர்ப்பார்ப்புகளும் இன்று
குறைந்தே காணுகிறதே,,

மறந்துவிடு என்றுசொன்ன
ஒரு வார்த்தைக்கு
இத்தனை மதிப்பிருக்கிறதா,,,!!
இல்லை வலியிருக்கிறதா,,!!
தெரியவில்லை

நீ சந்தோஷமாய் இருக்கிறாய்
என்பதை மட்டும் இன்னும் நான்
நம்புகிறேன்"

அனு,,,

எழுதியவர் : அனுசரன் (17-Mar-13, 12:09 am)
பார்வை : 290

மேலே