பாசமும் நேசமும்

இதயப் புத்தகத்தில் பக்கங்கள் பல
எவருக்கும் பொதுவாய் பாசம் நேசம் !
இரண்டும் உள்ள உயிர்களும் உள்ளன
இல்லாத மனங்களும் உலகில் உண்டு !

பாசம் மிகுந்தால் பரிவும் பிறந்திடும்
நேசம் இருந்தால் கொடையும் வந்திடும் !
நிறைந்து வழிந்த நெஞ்சங்கள் இருந்தன
மறைந்து போனது மண்ணில் இன்று !

உதவிடும் எண்ணமே உறைந்து விட்டது
உள்ளத்தில் பலருக்கு உதிர்ந்தே போனது !
சுழன்றிடும் பூமியில் சுயநலமே திரியுது
பொதுநலம் என்றால் பொருளும் தெரியல !

நேசமிகு நெஞ்சங்கள் வளர்ந்திட வேண்டும்
பாசமிகு பயிர்களே விளைந்திட வேண்டும்
அடுத்தவர் நலனை நினைத்திட வேண்டும்
இதயங்கள் யாவும் மகிழ்ந்திட வேண்டும் !

சமுதாய சிந்தனையே சிந்தையில் எனக்கு
அமுதாய் என்றும் ஆனந்தம் நிலைக்க !
உள்ளத்தின் ஊற்றை உலகிற்கு படைத்தேன்
எண்ணியதை எழுத்து தளத்தில் வடித்தேன் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Mar-13, 11:31 am)
பார்வை : 159

மேலே