@@@ஒட்டுமொத்த பெண்கொடுமை ஒருத்திக்கா @@@

கருவொன்று உதித்ததம்மா
கனவெல்லாம் பறந்ததம்மா
கனவாக சட்டென்று மறைந்ததம்மா
கருவில் பெண்ணாக நானம்மா

அன்போடு உண்டான தருவாய்
அத்தோடு உருவானது கருவாய்
அளவில்லா மகிழ்ச்சியின் நிறைவாய்
அழகாக வெளியானது பெண் சிசுவாய்

ஆசாமிகள் ஒன்றுகூடி கழுகாய்
ஆண்குழந்தை மோகத்தால் முடிவாய்
ஆசைமுகம் காணாத சிசுவை பிடித்தாய்
ஆவது அறியா நீயும் கள்ளிப்பால் குடித்தாய்

இன்ப வாழ்வை வாழவந்தவள் தெளிவாய்
இது வேண்டாமென கக்கினால் விரைவாய்
இனிய வேளை வந்து நின்றாள் உயிராய்
இக்கணமும் இவள் ஏதும் அறியாய்

ஈன்ற உயிர் வந்ததென சரியாய்
ஈடுகட்டி வளர்த்தால் நற்க்கிளியாய்
ஈகை மனம் கொண்ட தாரகையாய்
ஈதல் குணத்தின் புதல்வியாய்

உன்னதமான குழந்தை பருவமாய்
உள்ளவளை உரசிப்பார்த்தது மனித ஓநாய்
உடையை மறைத்து கட்டுடலை ஓர் கூறாய்
உரசி ரசித்தது சிறுமியவள் ஏதும் அறியாய்

ஊர்மெச்சும் நற்குல மங்கை பருவமாய்
ஊறும் எறும்புகளுக்கு நற்த்தேனாய்
ஊடலுடன் வந்தன பேய்கள் வீணாய்
ஊகித்தவள் பார்வையால் ஆனால் தீயாய்

எண்ணியவள் வயதும் உருண்டோட வீணாய்
என்னவனை சுமக்க வேண்டியவளுமாய்
என்போல் ஆனாளோ முதிர்கன்னியாய்
என வாழ்வும் போனது விரக்தியாய்

ஏக்கங்கள் தீரவே நிறைவாய்
ஏதோ ஒருவன் வந்து நின்றான் நிஜமாய்
ஏனோ உள்ளமெல்லாம் ஆனது மகிழ்வாய்
ஏனையோர் ஆசியோடு திருமணம் முடிவாய்

ஐயமான வாழ்வு அழகிய வழியாய்
ஐம்பூதங்களின் சாட்சியில் ஆரம்பமாய்
ஐயை ஒன்றானால் ஓர் உடலுயிராய்
ஐம்பொறி கட்டுண்டு கணவனோடு இணைந்தாய்

ஒருநாள் உறவோடு உறங்கினான் பாவியாய்
ஒவ்வாமல் எயிட்சுக்கு ஆனான் பிணமாய்
ஒருபாவமும் அறியாதவள் விதவையாய்
ஒட்டிப்போனாள் அவள் ஒரு ஜடமாய்

ஓயாத துஷ்டர்களால் வாழ்க்கை துயரமாய்
ஓர் ஆன் பேசினாலும் வந்தது பலியாய்
ஓய்ந்து எழுந்து நின்றாள் துணிவாய்
ஓய்வில்லாமல் உழைத்தால் நற் செவிலியாய்

ஔவை மொழியை எடுத்துரைத்தாய்
ஔடதமும் குழந்தைகளுக்கு கொடுத்தாய்
ஔவாரே அக்கிராமத்துக்கு ஆனால் தாயாய்

அன்பின் அழகிய வடிவமாய்
ஆசையாய் பூமிக்கு வந்தாய்
இல்லாத வாழ்வையும் ஏற்றாய்
ஈரேழு ஜென்மமும் வேண்டாம் பெண்ணாய்
உண்மையும் மாறாதோ சுதந்திரமாய்
ஊமையென சட்டங்கள் இங்கு ஏடாய்
என்று மாறுமோ இந்த நிலை தேனாய்
ஏக்கங்கள் மாறும் நாளும் சுகமாய்
ஐம்புலனும் கட்டுப்படுத்தி அறிவாய்
ஒழுக்கம் ஒன்றே உண்மையான வாழ்வாய்
ஓயாமல் நிலைத்து நிற்கும் சரியாய்
விரைவில் நம்நாடும் மாறும் நிறைவாய்
.. கவியாழினி...

எழுதியவர் : கவியாழினி (17-Mar-13, 1:42 pm)
பார்வை : 384

மேலே