வர்ணிக்க மறந்துவிட்டேன் இவளை !!!

வான் மேகங்கள் அணி சூழ
வந்த வான் துளியும் இவள் மீது விழ
செழித்தாளே பசுமையாய் பரவலாய் ;

கொள்ளாத தண்ணீர் எங்கும் இருக்க ! அலை

இவள் பரிசத்தை நொடி பொழுதும் வந்து படருதடி ,
இவள் பாதத்தையும் நனைத்து போகுதடி ;

கண்டாலே ஓவியமாய் பார்த்தாலே பரவசமாய்
என்றென்றும் காவியமாய் தீட்ட தோன்றுதடி ;

ஒருங்கே அமைந்த கலாச்சாரமும், பண்பாடும்
இவ்வுலகம் இவளை பார்த்துதான் கற்குதடி ;

தெய்வீகம் பொங்கும் உன் உருவத்தில்

எத்தனை குலத்தெய்வங்கள் உள்ளதடி ,

அவற்றை விழுந்து தொழ
எனக்கு ஆயுட்காலமும் இல்லையடி ;

இவள் நாட்டியமே தலையாய்
பார் முழுக்க அறிந்ததடி ,

இவள்தான் மூத்தவளாய் புவி
முழுவதும் தெரியுமடி ;

வர்ணிக்க மறந்துவிட்டேன் இவளை !

எந்தன் தமிழின தாயை ;
தமிழ் அன்னையை ;
தமிழ் தாயை ;

எழுதியவர் : D.yogendran (17-Mar-13, 7:30 pm)
பார்வை : 166

மேலே