தெருவில் திரியும் நாய்க்குத் தெரியும்
உன் தெருவில் திரியும்
நாய்க்குத் தெரியும் அது
அர்த்தமின்றி குரைத்தது
எத்தனை முறை
அப்பாவிகளை கடித்தது
எத்தனை முறை
புறம் பேசியது
எத்தனை முறை
பழி தீர்த்தது
எத்தனை முறை
சேற்றிலே குளித்தெழுந்து
சந்தனத்தை பூசியது போல்
சலனமின்றி திரிந்தது
எத்தனை முறை
நன்றி என்ற சொல்லுக்கே
நல்லர்த்தம் நாய் என்று
நொடிப்பொழுதும் உணராமல்
நெறிதவறி
உன் மனத்தெருவில்
திரிந்து வரும் மனசாட்சி ...
அந்த நன்றியுள்ள ஜீவனை
கேட்டுப்பார்...
சொல்லிவிடும்...அத்தனையும்
அடிப்படையில் அதுவே உன்
அகம் காட்டும் கண்ணாடி
என்பதனால்...