கிழக்கினைத் தேடும் விளக்குகள்
![](https://eluthu.com/images/loading.gif)
ச(இ)லங்கை கட்டி ஆடிய
சதியே..!
விழுகிறதா
உன் சீழ்ப்பிடித்த செவிகளில்
எங்கள் கதியே...!
இன்பத் தமிழ் வந்து
பாயும் போதெல்லாம்;
தமிழன் என்ற சொல்
கேட்கும் போதெல்லாம்;
அடைத்துக் கொள்ளுமா
உன் ஓட்டைக் காதுகள்...!
நீ
எண்ண மறந்தாய்...!
நாங்கள்
உண்ண மறுத்தோம்...!
வாள் பிடித்த வரலாறு
துருப்பிடிக்கவில்லை...!
கருப்பிடித்து வந்தோம்
இனிப் பொறுப்பதில்லை... !
உடல் இளைத்த
ஈர்க்குச்சியல்ல;
உங்கள்
ஈன முகம் கிழிக்கும்
தீக்குச்சி நாங்கள்..!
விளக்கினைத் தேடும்
விட்டில்களல்ல;
கிழக்கினைத் தேடும்
விளக்குகள் நாங்கள்...!
வயிற்றுப் பிழைப்புக்கு
வாசித்தோம்
வகுப்பறையில்...!
இன்று
வயிற்றில் பிறந்தோர்க்கு
வசித்தோம்
தெருச் சிறையில்..!
உன்
பயிற்றுப் பிழைக்கு
வாசி நீ
ஐ நாவில் தீர்மானம்...!
அதுவே காக்கும்
உன் இறுதி மானம்...!
ஈழம் எரிந்த போதும்
உன்
ஈரம் காய்ந்த போதும்
சாய்ந்ததில்லை
எங்கள் வீரம்...!
தீவுக்கு
ஒரு தீர்வு..!
தீர்வுக்கு
ஒரு தேர்வு..!
உன் நோவுக்கும்
ஒரு தீர்வு..!
ஒன்றாய்ச் சேர்த்து
ஐ நாவில்
நீ முழங்கு..!