இதயம் உதயம் மேகம் அந்தி வானம்
![](https://eluthu.com/images/loading.gif)
இதயம்
இமயம்
வெண்மையால்
உயரத்தால்
உறுதியால்
இதயம்
உதயம்
சிவப்பினால்
எழுவதால்
விழிப்பதால்
இதயம்
மேகம்
மிதப்பதால்
கொடுப்பதால்
பொழிவதால்
இதயம்
அந்தி வானம்
மாலை மயக்கத்தால்
மௌனத் தயக்கத்தால்
காதல் என்பதால்
----கவின் சாரலன்