மகா சமுத்திரம் நீ...?
காதல் என்ன காதல்...?
குளமென்று அதனுள்
குளித்து வரலாமென...,
குதித்து விட்டேன் ...
நீரோட்டத்தின் வீரியம்..
அதிகமாக இருந்ததால் ...
நதியென நினைத்து மறுகரை
அடைய நீந்தினேன்...,
நீந்தி களைத்ததும் தான்
தெரிந்தது நீ கரையே
இல்லா கடலென....
கடலுமல்ல மகா சமுத்திரம் நீயென்று
இதனால் தானோ காதலில் வீழ்ந்தவன்
மூழ்கிவிடுவான் என்று உவமையாக சொல்லப்படுகிறதோ ....?