நட்பே!

நட்பே!

நீ
எப்போது
எங்களுக்குள் வந்தாய்!
எப்படி வந்தாய்!
எவ்வழியே வந்தாய்!
என்பதை
எவரும் அறியோம்!

ஆனால்
நீ வந்த நாள்முதல்
தந்த மாற்றங்கள்!
தடுமாறிய எங்களின்
தடம்மாற்றிய ஏற்றங்கள்!

நீ
வந்த வழி
தெரியாவிட்டாலும்
நீ
போக வழி
தரமாட்டோம்!
வாழும்வரை
விடமாட்டோம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Mar-13, 12:57 pm)
பார்வை : 429

மேலே