பிரியா விடை

எமக்குள் எமது நட்பு
எமக்கருகில் நிகழ்கிறது
நம் பிரிவு .

அவசரத்திலும்
இறந்ததுவை அசைபோட்டதனால்
நம் நிகழ்வுகளுக்குள்ளும்
சில கண்ணீர் துளிகள்

நட்பினில் விழும் விரிசல்கள்
பிரியும் விடையான போதும்
பிரியா விடையென
மனதுக்கு -சமாதானம்
சொல்லியபடி .........

வழியனுப்பி விட்டு வருகையில்
கடைசி தருணத்தில்
மயான அமைதியில்
பொதித்த வார்த்தைகளை
வழிநெடுக்கிலும் தேடுகிறேன் ..

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (18-Mar-13, 11:55 am)
Tanglish : priya vidai
பார்வை : 1611

மேலே