என் தந்தையர்

'எழுது'வில் நான் இணைந்து பல திங்களாகியும்
எழுதத் துவங்கவில்லை...
இப்போதுதான் தட்டச்சை தட்டி கவிதைகளை இத்தளத்தில் வடிக்கத் துவங்கியுள்ளேன்...
துவங்கும் முன் கடவுளை கைத்தொழ வேண்டாவோ?
தாகூர்-பாரதி
இவ்விரு தந்தையரின் தாள் பணியாமல்
எழுத் துவங்கினால்,
என் எழுதுகோலுக்கு முக்தி கிட்டாது.
என் எழுத்துக்களும் சீர்பெறாது.
இரு குயில்கள் இவை
ஒன்று வங்கத்தின் தங்கம்
மற்றொன்று தமிழகத்தின் சிங்கம்
ஒன்று அன்பிற்காக பாடியது
மற்றொன்று விடுதலைக்காக வீர முழக்கமிட்டது...
இவர்களை பற்றி நம்மக்களுக்கு சொல்ல வேண்டியது அதிகமில்லை..
இவ்விரு கவி தந்தையர்களின் தாள் பணிந்து,
'எழுது'-சமுத்திரத்திலே
என் பயணத்தை துவங்குகிறேன்.