காலமெல்லாம் கைகோர்த்து ....

மணற்குன்றுகள்
நமக்கெதற்கு ?
காற்றினில்
கலைந்து விடும்
மலைச் சிகரம்
அதுவே
நமது லட்ச்சியம்
விண்மீன்கள் ஆயிரம்
நமக்கெதற்கு ?
வெறுமனே
கண் சிமிட்டும்
வெண்ணிலா
ஒன்று
நமக்குப் போதும்.
சிரிக்கும் சிங்காரிகள் பத்து
நமக்கெதற்கு ?
ஓசி பீசாவில்
பர்ஸ் காலியாகும்
காலமெல்லாம்
கைகோத்துச் செல்ல
காதலி
ஒருத்தி போதும்
----கவின் சாரலன்